Posts

பொன்னியின் செல்வன் கவிதைகள்_2

# பொன்னியின் செல்வன் கவிதைகள்_2     *****************************************    அழகான ராட்சசி     +++++++++++++ நந்தினி !!! எண்ணத் தூரிகை வரைந்த காரிகை உன்னை எழுத்தில் வரைந்தார் அமரர் ஐயா.. ஊமைராணி பெற்ற ஊரறியா மகள் நீ.. அர்ச்சகர் வளர்த்த கோதை நீ.. உன்னை பேதை என்பதா.. பாதகி என்பதா.. பிறக்காத உன் பிறப்பும் நீயும் இன்று வரை சிதம்பர ரகசியம் தான்.. விதிவசத்தால் மாறிய வாழ்க்கையை மதிவசத்தால் மாற்றிய மதிவதனி நீ.. காதல் கைகூடவில்லை பழிதீர்க்க வழி தேடினாய்.. கிழவரை மணந்து அரசியானாய்.. உன்னை தனதாக்க நினைத்த தனாதிகாரி.. அதிகாரத்தை மட்டும் உனதாக்கி நீ.. காணும் ஆடவர் நெஞ்சத்தை வசீகரத்தால் வதைப்பவள் நீ.. உன் நெஞ்சமோ வஞ்சத்தால் ஆன எரிமலை.. சினத்தால் சிவந்த ஒரு விழியசைவில் போர்கள் ஆயிரம் மூண்டு மறையும்.. பாண்டியர் வாளை தீட்டிக்கொள்ள சோழர் சொத்தை வாரிக் கொடுத்தாய்.. சோழ இளவலுக்கு கடம்பூரில் வலைவிரித்தாய்.. இதழில் மென்நகையும்.. நெஞ்சத்தில் எரிமலையும்.. ரகசியமாய் உடைவாளும்.. சுமந்து சென்றாய்.. வெண்ணெய் நெய்யாகும் வேளையில் ந...

பொன்னியின் செல்வன் கவிதைகள்_1

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்_குந்தவை காதலை மிக ரசனையோடு வர்ணித்திருப்பார் கல்கி.. காதலை கவிதையாக வடிக்கும் என் சிறு முயற்சி இதோ.. # பொன்னியின் செல்வன் கவிதைகள்_1     ++++++++++++++++++++++++++++++++ # காமன் களமும்.. காதல் களமும்..    ********************************** அவன் வாளுடையவன்.. இவள் வேல்விழியவள்.. அரும்பு மீசையும்.. குறும்பு பார்வையும்.. திமிர்ந்த தோள்களும்.. உடைவாளும்.. உடையவன் வல்லத்து இளவரசன்.. அறிவுச் செருக்கும்.. அழகு மிடுக்கும்.. வேல்விழிகளும்.. உடையவள் சோழத்து இளவரசி.. காமன் போர்க்களத்தில் இருவரும் சந்தித்தால்.. அங்கே வாளுக்கு என்ன வேலை.. விழி வேலுக்கு அல்லவா வேலை.. ஒரு வாள் வீச்சில் பல தலைகளை சாய்க்கும் அசகாய சூரன்.. ஒரு விழி வீச்சில் வீழ்ந்தேவிட்டான்.. ஓலை கொடுக்க வந்தவன் மனதையும் கொடுத்து விட்டான் இலவச இணைப்பாக.. காமன் களத்தில் வீழ்ந்தவன் காதல் களத்தில் வாகை சூடி நின்றான் வெற்றிக் களிப்போடு.. அவளுக்காக.. மீண்டும் ஒரு பயணம்.. புறப்பட்டு விட்டான்.. இலக்கை நோக்கி.. இலங்கை நோக்கி.. இம்முறை.. ஓலையோடு.....

கவிதை

#கவிதைபோட்டி_3_கங்கையின்_வரவும்_ஈசனின்_நிலையும் ஈசனேயானாலும் சிவசிவ என்று இருந்திருக்க வேண்டாமோ? நான்கெழுத்தில் உமாதேவி இருக்க ஐந்தெழுத்தில் கங்கா தேவி ஏன்? உமையொருபாகனாய் உடலில் பாதி ஈந்தாலும் கங்கையெனும் மங்கையை குழலில் ஏந்தல் முறையாகுமோ? ஆடலரசனே! 'பாவ'மும் நீ பாவமும் நீ ஈசனுக்கே மனைவியானாலும் மனைவி மனைவி தானே!!!😊😇

கவிதை

#வள்ளல்களும் தமிழும் 🌻🌻🌻வாழும் தமிழும் வாழ்ந்த வள்ளல்களும்🌸🌸🌸 "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" "மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்" "ஏழென நீளும் பட்டியலில் சிறந்தவர் யாரென்கையில் அஞ்சாமல் கூறுவேன் 'அதியமான் அஞ்சி' என்று.." "ஒரேயொரு நெல்லிக்கனி ஈந்தான் ஔவை கிழவிக்கு.. " "சாகாவரம் பெற்று அவள் காலந்தோறும் தமிழ் வளர்க்க ஆவல் கொண்டு" "இங்ஙனம் புரவலர்கள் பலர் இரந்த புலவர்களுக்கு ஈந்தார்கள்.." "பொன்னும் பொருளும் பரிசில்களும் ஆக்க நெல்லும் அரிசியும்.." "செஞ்சோற்று கடனுக்காக அவர்கள் ஆக்கிக் தந்தவையெல்லாம் அள்ள அள்ள குறையாத கவிச்செல்வங்கள்.." "இன்றளவும் நாம் படித்து மகிழ்கிறோம் சிந்தை இனிக்க இனிக்க சங்க இலக்கியங்களை" "தமிழ் வாழ.. தாம் வாழ்ந்த.. வள்ளல்களின் கொடை வாழ்க !!! புகழ் வளர்க !!! "

கவிதை

# கவிதை கஜாசுரன் 'வருகிறான்.. வருகிறான்.. வந்துகொண்டே இருக்கிறான்..' என்றார்கள்.. 'யார் வருகிறார்கள்' என்றால் 'கஜா வருகிறான் ஆயிரம் புஜம் கொண்டு வாயுவின் தளபதி வருகிறான் வருணனின் தோழன் வருகிறான் போர் தொடுத்து வருகிறான் தாக்குதல் பலமாக இருக்கும் தற்காத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்.. கஜாசுரா !!! வாழ்வு செழிக்க வருணனோடு கூடி வருவாய் என்று நினைத்தால்.. காவு வாங்க காலனோடு கூட்டணி அமைத்து வந்திருக்கிறாய்.. போர்க்களத்தை காட்டு காட்டென்று காட்டிவிட்டாய்.. இம்முறை மக்கள் உயிரை விட்டு வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டாய்.. உயிரை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி என்று கலங்கியவர்களின் கண்ணீர் கடல் மட்டத்தை உயர்த்தியது.. ஏன் இந்த கோரத்தாண்டவம்? இழந்தோர் வலி அறியமாட்டாயா நீ ?? எளியோர் நிலை கண்டு எள்ளி நகையாடும் வலியோர்கூட்டத்தில் ஒருவன் தானா நீயும்???😠😭😨 _சாரதா ஞானசேகரன்

கவிதை

இவ்வாண்டு பொன்னியின் செல்வன் குழு தஞ்சை சந்திப்பின் போது நான் வாங்கிய பொம்மை... அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது தோன்றிய கவிதை... ***தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை*** நர்த்தகியே! யார் நீ? தேவலோகத்து ரம்பை மேனகை ஊர்வசியா? இல்லை பூலோகத்து மாதவியா? ராஜ ராஜ சோழனின் அவை நர்த்தகியா? சொந்த ஊர் தஞ்சையா? எதைக் கேட்டாலும் தலையை மட்டும் அசைக்கிறாயே.. கொஞ்சம் இடையை அசைத்து கண்ணை உருட்டி அபிநயம் பிடித்து ஆடல் பழகு.. இல்லையேல் உன்னை 'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை' என்றே ஊர் சொல்லும்!!! 😍😍😍

கவிதை

***மகாகவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து*** எட்டையபுரம் தந்த சுடரே ! முண்டாசுக் கவியே ! உன் முறுக்கு மீசை வீரம் சொல்கிறது உன் கூர்விழிகள் ஞானம் சொல்கிறது உன் பாடல்களோ இரண்டும் சொல்கிறது இன்னும் சொல்கிறது... ஈராறு உயிரும் மூவாறு மெய்யும் கலந்து மாயம் செய்கிறாய் வார்த்தை ஜாலம் செய்கிறாய் இலக்கணம் உடைத்தாலும் தமிழ்ப்பற்றில் விஞ்சுகிறாய்... தேசத்தின் நிலை கண்டு சினந்தாய் நீ மக்கள் நெஞ்சகத்தே வீரக் கனல் மூட்டி விடுதலைக்கு வித்திட்டாய் நீ இன்று கனிகளை உண்கிறோம் நாங்கள் ! சாதம் படைக்க மட்டுமே பெண்கள் என்று பேசிய மூடர்களை ஏசினாய்  நீ பெண்கல்வி போற்றினாய் நீ இன்று வான்முட்டும் சாதனைகள் படைக்கிறோம் நாங்கள் ! ஞாலம் உய்ய இமைப்பொழுதும் சோராது நீ ஆற்றிய சேவைகள் போற்றி கஜேந்திரன் உனக்கு தந்தான் மோட்சம் இவ்வுலகில் மட்டுமல்ல அவ்வுலகிலும் உன் சேவைகள் தொடர ஆவல் கொண்டு !!!😍😍😍 _ சாரதா ஞானசேகரன்