Posts

Showing posts from February, 2019

பொன்னியின் செல்வன் கவிதைகள்_2

# பொன்னியின் செல்வன் கவிதைகள்_2     *****************************************    அழகான ராட்சசி     +++++++++++++ நந்தினி !!! எண்ணத் தூரிகை வரைந்த காரிகை உன்னை எழுத்தில் வரைந்தார் அமரர் ஐயா.. ஊமைராணி பெற்ற ஊரறியா மகள் நீ.. அர்ச்சகர் வளர்த்த கோதை நீ.. உன்னை பேதை என்பதா.. பாதகி என்பதா.. பிறக்காத உன் பிறப்பும் நீயும் இன்று வரை சிதம்பர ரகசியம் தான்.. விதிவசத்தால் மாறிய வாழ்க்கையை மதிவசத்தால் மாற்றிய மதிவதனி நீ.. காதல் கைகூடவில்லை பழிதீர்க்க வழி தேடினாய்.. கிழவரை மணந்து அரசியானாய்.. உன்னை தனதாக்க நினைத்த தனாதிகாரி.. அதிகாரத்தை மட்டும் உனதாக்கி நீ.. காணும் ஆடவர் நெஞ்சத்தை வசீகரத்தால் வதைப்பவள் நீ.. உன் நெஞ்சமோ வஞ்சத்தால் ஆன எரிமலை.. சினத்தால் சிவந்த ஒரு விழியசைவில் போர்கள் ஆயிரம் மூண்டு மறையும்.. பாண்டியர் வாளை தீட்டிக்கொள்ள சோழர் சொத்தை வாரிக் கொடுத்தாய்.. சோழ இளவலுக்கு கடம்பூரில் வலைவிரித்தாய்.. இதழில் மென்நகையும்.. நெஞ்சத்தில் எரிமலையும்.. ரகசியமாய் உடைவாளும்.. சுமந்து சென்றாய்.. வெண்ணெய் நெய்யாகும் வேளையில் ந...

பொன்னியின் செல்வன் கவிதைகள்_1

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்_குந்தவை காதலை மிக ரசனையோடு வர்ணித்திருப்பார் கல்கி.. காதலை கவிதையாக வடிக்கும் என் சிறு முயற்சி இதோ.. # பொன்னியின் செல்வன் கவிதைகள்_1     ++++++++++++++++++++++++++++++++ # காமன் களமும்.. காதல் களமும்..    ********************************** அவன் வாளுடையவன்.. இவள் வேல்விழியவள்.. அரும்பு மீசையும்.. குறும்பு பார்வையும்.. திமிர்ந்த தோள்களும்.. உடைவாளும்.. உடையவன் வல்லத்து இளவரசன்.. அறிவுச் செருக்கும்.. அழகு மிடுக்கும்.. வேல்விழிகளும்.. உடையவள் சோழத்து இளவரசி.. காமன் போர்க்களத்தில் இருவரும் சந்தித்தால்.. அங்கே வாளுக்கு என்ன வேலை.. விழி வேலுக்கு அல்லவா வேலை.. ஒரு வாள் வீச்சில் பல தலைகளை சாய்க்கும் அசகாய சூரன்.. ஒரு விழி வீச்சில் வீழ்ந்தேவிட்டான்.. ஓலை கொடுக்க வந்தவன் மனதையும் கொடுத்து விட்டான் இலவச இணைப்பாக.. காமன் களத்தில் வீழ்ந்தவன் காதல் களத்தில் வாகை சூடி நின்றான் வெற்றிக் களிப்போடு.. அவளுக்காக.. மீண்டும் ஒரு பயணம்.. புறப்பட்டு விட்டான்.. இலக்கை நோக்கி.. இலங்கை நோக்கி.. இம்முறை.. ஓலையோடு.....