பொன்னியின் செல்வன் கவிதைகள்_2
# பொன்னியின் செல்வன் கவிதைகள்_2
*****************************************
அழகான ராட்சசி
+++++++++++++
நந்தினி !!!
எண்ணத் தூரிகை
வரைந்த காரிகை
உன்னை
எழுத்தில் வரைந்தார்
அமரர் ஐயா..
ஊமைராணி பெற்ற
ஊரறியா மகள் நீ..
அர்ச்சகர் வளர்த்த
கோதை நீ..
உன்னை பேதை என்பதா..
பாதகி என்பதா..
பிறக்காத உன் பிறப்பும் நீயும்
இன்று வரை சிதம்பர ரகசியம் தான்..
விதிவசத்தால் மாறிய வாழ்க்கையை
மதிவசத்தால் மாற்றிய
மதிவதனி நீ..
காதல் கைகூடவில்லை
பழிதீர்க்க வழி தேடினாய்..
கிழவரை மணந்து அரசியானாய்..
உன்னை
தனதாக்க நினைத்த தனாதிகாரி..
அதிகாரத்தை மட்டும்
உனதாக்கி நீ..
காணும் ஆடவர் நெஞ்சத்தை
வசீகரத்தால் வதைப்பவள் நீ..
உன் நெஞ்சமோ
வஞ்சத்தால் ஆன எரிமலை..
சினத்தால் சிவந்த
ஒரு விழியசைவில்
போர்கள் ஆயிரம் மூண்டு மறையும்..
பாண்டியர் வாளை தீட்டிக்கொள்ள
சோழர் சொத்தை வாரிக் கொடுத்தாய்..
சோழ இளவலுக்கு
கடம்பூரில் வலைவிரித்தாய்..
இதழில் மென்நகையும்..
நெஞ்சத்தில் எரிமலையும்..
ரகசியமாய் உடைவாளும்..
சுமந்து சென்றாய்..
வெண்ணெய் நெய்யாகும் வேளையில்
நீயும் உருகி நின்றாய்
இளவலின் பேச்சில்..
வஞ்சம் தீர்க்க வந்த நெஞ்சமும்..
வாள் பிடிக்க வேண்டிய கைகளும்..
குழப்பத்தில் குலைந்ததிருந்த வேளை..
விதிவசத்தால்
அரங்கேறியது கொலை..
சரித்திரத்தில் நீங்கா நிகழ்வு..
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
ஆயிரம் கேள்விகளை விடுத்து..
அழகு முகமும்..
வஞ்சத்தால் நெஞ்சமுமாய்..
துணிந்த பெண்மையின்
அடையாளமாய் நீ..
இல்லாத உன்னை
இருத்திக் கொண்டேன்
என் இதயத்தின் கடையோரத்தில்..
சோழர் புகழ் வாழும் வரை
நீயும் வாழ்ந்திருப்பாய்
பெண்ணே !!!😍😍😍
_சாரதா ஞானசேகரன்
*****************************************
அழகான ராட்சசி
+++++++++++++
நந்தினி !!!
எண்ணத் தூரிகை
வரைந்த காரிகை
உன்னை
எழுத்தில் வரைந்தார்
அமரர் ஐயா..
ஊமைராணி பெற்ற
ஊரறியா மகள் நீ..
அர்ச்சகர் வளர்த்த
கோதை நீ..
உன்னை பேதை என்பதா..
பாதகி என்பதா..
பிறக்காத உன் பிறப்பும் நீயும்
இன்று வரை சிதம்பர ரகசியம் தான்..
விதிவசத்தால் மாறிய வாழ்க்கையை
மதிவசத்தால் மாற்றிய
மதிவதனி நீ..
காதல் கைகூடவில்லை
பழிதீர்க்க வழி தேடினாய்..
கிழவரை மணந்து அரசியானாய்..
உன்னை
தனதாக்க நினைத்த தனாதிகாரி..
அதிகாரத்தை மட்டும்
உனதாக்கி நீ..
காணும் ஆடவர் நெஞ்சத்தை
வசீகரத்தால் வதைப்பவள் நீ..
உன் நெஞ்சமோ
வஞ்சத்தால் ஆன எரிமலை..
சினத்தால் சிவந்த
ஒரு விழியசைவில்
போர்கள் ஆயிரம் மூண்டு மறையும்..
பாண்டியர் வாளை தீட்டிக்கொள்ள
சோழர் சொத்தை வாரிக் கொடுத்தாய்..
சோழ இளவலுக்கு
கடம்பூரில் வலைவிரித்தாய்..
இதழில் மென்நகையும்..
நெஞ்சத்தில் எரிமலையும்..
ரகசியமாய் உடைவாளும்..
சுமந்து சென்றாய்..
வெண்ணெய் நெய்யாகும் வேளையில்
நீயும் உருகி நின்றாய்
இளவலின் பேச்சில்..
வஞ்சம் தீர்க்க வந்த நெஞ்சமும்..
வாள் பிடிக்க வேண்டிய கைகளும்..
குழப்பத்தில் குலைந்ததிருந்த வேளை..
விதிவசத்தால்
அரங்கேறியது கொலை..
சரித்திரத்தில் நீங்கா நிகழ்வு..
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும்
ஆயிரம் கேள்விகளை விடுத்து..
அழகு முகமும்..
வஞ்சத்தால் நெஞ்சமுமாய்..
துணிந்த பெண்மையின்
அடையாளமாய் நீ..
இல்லாத உன்னை
இருத்திக் கொண்டேன்
என் இதயத்தின் கடையோரத்தில்..
சோழர் புகழ் வாழும் வரை
நீயும் வாழ்ந்திருப்பாய்
பெண்ணே !!!😍😍😍
_சாரதா ஞானசேகரன்
Comments
Post a Comment