கவிதை

இவ்வாண்டு பொன்னியின் செல்வன் குழு தஞ்சை சந்திப்பின் போது நான் வாங்கிய பொம்மை... அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது தோன்றிய கவிதை...

***தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை***

நர்த்தகியே!
யார் நீ?
தேவலோகத்து
ரம்பை மேனகை ஊர்வசியா?
இல்லை
பூலோகத்து மாதவியா?
ராஜ ராஜ சோழனின்
அவை நர்த்தகியா?
சொந்த ஊர் தஞ்சையா?
எதைக் கேட்டாலும்
தலையை மட்டும் அசைக்கிறாயே..
கொஞ்சம் இடையை அசைத்து
கண்ணை உருட்டி
அபிநயம் பிடித்து
ஆடல் பழகு..
இல்லையேல்
உன்னை
'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை'
என்றே ஊர் சொல்லும்!!! 😍😍😍

Comments

Popular posts from this blog

கவிதை

கவிதை