பொன்னியின் செல்வன் கவிதைகள்_1

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்_குந்தவை காதலை மிக ரசனையோடு வர்ணித்திருப்பார் கல்கி.. காதலை கவிதையாக வடிக்கும் என் சிறு முயற்சி இதோ..

# பொன்னியின் செல்வன் கவிதைகள்_1
    ++++++++++++++++++++++++++++++++

# காமன் களமும்.. காதல் களமும்..
   **********************************

அவன் வாளுடையவன்..
இவள் வேல்விழியவள்..
அரும்பு மீசையும்..
குறும்பு பார்வையும்..
திமிர்ந்த தோள்களும்..
உடைவாளும்..
உடையவன்
வல்லத்து இளவரசன்..

அறிவுச் செருக்கும்..
அழகு மிடுக்கும்..
வேல்விழிகளும்..
உடையவள்
சோழத்து இளவரசி..

காமன் போர்க்களத்தில்
இருவரும் சந்தித்தால்..
அங்கே வாளுக்கு என்ன வேலை..
விழி வேலுக்கு அல்லவா வேலை..
ஒரு வாள் வீச்சில்
பல தலைகளை சாய்க்கும்
அசகாய சூரன்..
ஒரு விழி வீச்சில்
வீழ்ந்தேவிட்டான்..
ஓலை கொடுக்க வந்தவன்
மனதையும் கொடுத்து விட்டான்
இலவச இணைப்பாக..

காமன் களத்தில் வீழ்ந்தவன்
காதல் களத்தில் வாகை சூடி நின்றான்
வெற்றிக் களிப்போடு..

அவளுக்காக..
மீண்டும் ஒரு பயணம்..
புறப்பட்டு விட்டான்..
இலக்கை நோக்கி..
இலங்கை நோக்கி..
இம்முறை..
ஓலையோடு..
விழிச்சிறையிட்ட
குந்தவையின் 😍😍😍
நினைவுகளை..
மனச்சிறையிலிட்டு..
வந்தியத்தேவன் 😍😍😍

_ சாரதா ஞானசேகரன்

Comments

Popular posts from this blog

கவிதை

கவிதை

கவிதை