காலமகள் கவிதைகள்
காலமகள் கவிதைகள்
************************
சுவடுகள் _ 2018
"""""""""""""'""""""""""""""
மெல்ல மெல்ல எட்டு வைத்து
எட்டி எட்டி பார்க்கிறாய்
போக மனமின்றி...
என்றாலும் உன்னை
வாழ்த்தி வழியனுப்பும்
நேரம் வந்துவிட்டது...
காலமகளே!
நீ தந்தவைக்கெல்லாம்
நன்றி கூற
கடமைப்பட்டிருக்கிறோம்...
இன்பம் தந்தாய்...
துன்பமும் நீ தந்தாய்...
சிரிப்பு தந்தாய்
அழுகையும் நீ தந்தாய்...
உறவு தந்தாய்
பிரிவும் நீ தந்தாய்...
அகவை கூட்டித் தந்தாய்
அனுபவமும் நீ தந்தாய்...
வாழ்க்கைப் பாடத்தின் ஒரு பகுதி
நான் கற்க...
நினைவுகளாய் என் நெஞ்சில்
நீ தங்கி...
தங்கைக்கு வழிவிட்டு விடைபெறுகிறாய்
நன்றிகள் பல
உரித்தாகட்டும் உனக்கு 😍😍🙏
##########
பரமபதம் _ 2019
"""""""""""""""""""""""""""""
காலமகளின் அடுத்த பிரதியே !!!
வருக... வருக...
உன்னை வரவேற்க
ஊரே களைகட்ட ஆரம்பித்துவிட்டது...
புத்தாண்டு...
'யாருக்கு எப்படி' என்று
சேனல் தோறும் ஜோதிடர்கள்
ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்...
நம் மக்களில் பலர்
தங்களை மேம்படுத்திக் கொள்ள
புத்தாண்டு தீர்மானங்களை
ஏற்க ஆரம்பித்து விட்டார்கள்...
ஒவ்வொரு ஆண்டும்
இதையே தான்
செய்து கொண்டிருக்கிறோம்...
முன்னேறிவிட்டோமா
என்ற கேள்விக்கு
விடையில்லை...
மீண்டும் ஒரு புத்தாண்டு...
மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்...
ஏணிகளுக்கும் பாம்புகளுக்கும்
இடையிலான ஓட்டம்...
பாம்பைக் கொன்று விட்டு
ஏணியை அடையத் துடிக்கிறது
ஒரு கூட்டம்...
மகுடி ஊதி
பாம்பைக் கூடையில் அடைத்து
தப்பாட்டம் ஆடி
முன்னேறத் துடிக்கிறது
இன்னொரு கூட்டம்...
பகடையே விதியைத்
தீர்மானிக்கிறது என்று
சோம்பியிருக்கிறது
வேறோரு கூட்டம்...
எனக்கு இவற்றில்
உடன்பாடில்லை...
எத்தனை முறை பாம்பிடம் சறுக்கினாலும்...
மீண்டும் மீண்டும் எழுந்து நின்று...
அடிமேல் அடிவைத்து...
ஏணியை அடைந்து...
ஏற்றம் பெற்று
இறுதியில் அடைவதே
பரமபதம் !
இதுவே ஆட்டத்தின் விதி...
இதுவே காலமகளின் விதியும் கூட...
புரிந்து கொண்டோர் வெற்றியடைவார்...
புரியாதோரின் முயற்சி தொடரட்டும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐
_ சாரதா ஞானசேகரன்
************************
சுவடுகள் _ 2018
"""""""""""""'""""""""""""""
மெல்ல மெல்ல எட்டு வைத்து
எட்டி எட்டி பார்க்கிறாய்
போக மனமின்றி...
என்றாலும் உன்னை
வாழ்த்தி வழியனுப்பும்
நேரம் வந்துவிட்டது...
காலமகளே!
நீ தந்தவைக்கெல்லாம்
நன்றி கூற
கடமைப்பட்டிருக்கிறோம்...
இன்பம் தந்தாய்...
துன்பமும் நீ தந்தாய்...
சிரிப்பு தந்தாய்
அழுகையும் நீ தந்தாய்...
உறவு தந்தாய்
பிரிவும் நீ தந்தாய்...
அகவை கூட்டித் தந்தாய்
அனுபவமும் நீ தந்தாய்...
வாழ்க்கைப் பாடத்தின் ஒரு பகுதி
நான் கற்க...
நினைவுகளாய் என் நெஞ்சில்
நீ தங்கி...
தங்கைக்கு வழிவிட்டு விடைபெறுகிறாய்
நன்றிகள் பல
உரித்தாகட்டும் உனக்கு 😍😍🙏
##########
பரமபதம் _ 2019
"""""""""""""""""""""""""""""
காலமகளின் அடுத்த பிரதியே !!!
வருக... வருக...
உன்னை வரவேற்க
ஊரே களைகட்ட ஆரம்பித்துவிட்டது...
புத்தாண்டு...
'யாருக்கு எப்படி' என்று
சேனல் தோறும் ஜோதிடர்கள்
ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்...
நம் மக்களில் பலர்
தங்களை மேம்படுத்திக் கொள்ள
புத்தாண்டு தீர்மானங்களை
ஏற்க ஆரம்பித்து விட்டார்கள்...
ஒவ்வொரு ஆண்டும்
இதையே தான்
செய்து கொண்டிருக்கிறோம்...
முன்னேறிவிட்டோமா
என்ற கேள்விக்கு
விடையில்லை...
மீண்டும் ஒரு புத்தாண்டு...
மீண்டும் ஒரு பரமபத ஆட்டம்...
ஏணிகளுக்கும் பாம்புகளுக்கும்
இடையிலான ஓட்டம்...
பாம்பைக் கொன்று விட்டு
ஏணியை அடையத் துடிக்கிறது
ஒரு கூட்டம்...
மகுடி ஊதி
பாம்பைக் கூடையில் அடைத்து
தப்பாட்டம் ஆடி
முன்னேறத் துடிக்கிறது
இன்னொரு கூட்டம்...
பகடையே விதியைத்
தீர்மானிக்கிறது என்று
சோம்பியிருக்கிறது
வேறோரு கூட்டம்...
எனக்கு இவற்றில்
உடன்பாடில்லை...
எத்தனை முறை பாம்பிடம் சறுக்கினாலும்...
மீண்டும் மீண்டும் எழுந்து நின்று...
அடிமேல் அடிவைத்து...
ஏணியை அடைந்து...
ஏற்றம் பெற்று
இறுதியில் அடைவதே
பரமபதம் !
இதுவே ஆட்டத்தின் விதி...
இதுவே காலமகளின் விதியும் கூட...
புரிந்து கொண்டோர் வெற்றியடைவார்...
புரியாதோரின் முயற்சி தொடரட்டும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐
_ சாரதா ஞானசேகரன்
Comments
Post a Comment