கவிதை
# கவிதை
கஜாசுரன்
'வருகிறான்.. வருகிறான்..
வந்துகொண்டே இருக்கிறான்..' என்றார்கள்..
'யார் வருகிறார்கள்' என்றால்
'கஜா வருகிறான்
ஆயிரம் புஜம் கொண்டு
வாயுவின் தளபதி வருகிறான்
வருணனின் தோழன் வருகிறான்
போர் தொடுத்து வருகிறான்
தாக்குதல் பலமாக இருக்கும்
தற்காத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்..
கஜாசுரா !!!
வாழ்வு செழிக்க வருணனோடு
கூடி வருவாய் என்று நினைத்தால்..
காவு வாங்க
காலனோடு கூட்டணி அமைத்து வந்திருக்கிறாய்..
போர்க்களத்தை காட்டு காட்டென்று காட்டிவிட்டாய்..
இம்முறை மக்கள் உயிரை விட்டு
வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டாய்..
உயிரை மட்டும் வைத்துக் கொண்டு
வாழ்வது எப்படி என்று
கலங்கியவர்களின் கண்ணீர்
கடல் மட்டத்தை உயர்த்தியது..
ஏன் இந்த கோரத்தாண்டவம்?
இழந்தோர் வலி அறியமாட்டாயா நீ ??
எளியோர் நிலை கண்டு எள்ளி நகையாடும்
வலியோர்கூட்டத்தில்
ஒருவன் தானா நீயும்???😠😭😨
_சாரதா ஞானசேகரன்
கஜாசுரன்
'வருகிறான்.. வருகிறான்..
வந்துகொண்டே இருக்கிறான்..' என்றார்கள்..
'யார் வருகிறார்கள்' என்றால்
'கஜா வருகிறான்
ஆயிரம் புஜம் கொண்டு
வாயுவின் தளபதி வருகிறான்
வருணனின் தோழன் வருகிறான்
போர் தொடுத்து வருகிறான்
தாக்குதல் பலமாக இருக்கும்
தற்காத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்..
கஜாசுரா !!!
வாழ்வு செழிக்க வருணனோடு
கூடி வருவாய் என்று நினைத்தால்..
காவு வாங்க
காலனோடு கூட்டணி அமைத்து வந்திருக்கிறாய்..
போர்க்களத்தை காட்டு காட்டென்று காட்டிவிட்டாய்..
இம்முறை மக்கள் உயிரை விட்டு
வாழ்வாதாரத்தை பறித்துக் கொண்டாய்..
உயிரை மட்டும் வைத்துக் கொண்டு
வாழ்வது எப்படி என்று
கலங்கியவர்களின் கண்ணீர்
கடல் மட்டத்தை உயர்த்தியது..
ஏன் இந்த கோரத்தாண்டவம்?
இழந்தோர் வலி அறியமாட்டாயா நீ ??
எளியோர் நிலை கண்டு எள்ளி நகையாடும்
வலியோர்கூட்டத்தில்
ஒருவன் தானா நீயும்???😠😭😨
_சாரதா ஞானசேகரன்
Comments
Post a Comment